உஷார்... யூ-ட்யூப் வீடியோவால் கொள்ளை! இப்படியும் நடக்கலாம் ஜாக்கிரதை! நீங்கள் சொந்தமாக யூ-ட்யூப் சேனல் நடத்துகிறீர்களா? மறக்காம சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க... லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க.. என்று ஒவ்வொரு வீடியோக்களின் ஆரம்பத்திலும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ கோவையில் இப்படி தனியாக யூ-ட்யூப் சேனல் நடத்திக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த பரிதாபக் கதையைக் கேளுங்க. தன்னுடைய சேனலுக்கு தொடர்ந்து சப்-ஸ்ரைபர்கள் அதிகரித்தது சந்தோஷம் தர, அப்படி சேனலை சப்ஸ்-க்ரைப் பண்ண ஒருத்தர், இவர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்து போலீசில் சிக்கியிருக்கிறார். கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல் (29). இவரது மனைவி பாபினா (28). இவர்கள் இருவரும் சேர்ந்து சுஹைல் விலாகர் மற்றும் சைபர் தமிழா ஆகிய யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு கோயம்புத்தூர் கே.ஜி.சாவடி பிச்சனூர் பகுதியில் தனக்கு சொந்தமாக கனவு இல்லம் என்ற வீட்டை இவர்கள் கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணி ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் தங்களது யூட...