Posts

Showing posts with the label #tasmac

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை!

Image
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை! மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி (நாளை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த மதுக்கூடங்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த மதுக்கூடங்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல் 3-ஏ, எப்எல் 3-ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. மீறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.