38 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைஞர் சிலை திறப்பு!! ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்!!1433029690
38 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைஞர் சிலை திறப்பு!! ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்!! தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவருக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கிறார். சுமார் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு சிலையை இன்று மே 28ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில்,திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .அக்கடிதத்தில் “அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வரவேற்பு மடல்.இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழக அரசின் சார்பில் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நாள் அனைவருக...