Posts

Showing posts with the label # | #Quot | #Promise | #Quot

“உளமாற உறுதி கூறுகிறேன்...” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்!

Image
“உளமாற உறுதி கூறுகிறேன்...” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்! * சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக அரசு பதவி ஏற்பு விழா, கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி எளிமையான முறையில் நடைபெற்றது.  * காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகை வந்த மு.க ஸ்டாலின், ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், அமைச்சர்களை ஆளுநருக்கு ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.  * விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 700 பேர் கலந்து கொண்டனர். * பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றனர்.  * காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டு ராவ், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றனர்.    * விழாவில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநித...