பிரபல சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!753076564
பிரபல சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்! பிரபல சீரியல் நடிகை தீபா, இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். ஏற்கெனவே முதல் கணவருடனான திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்தான பின்னர், மகனுடன் தனியே வாழ்ந்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை தீபா, வீடியோ எடிட்டர் சாய் கணேஷ் பாபுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்களது காதலுக்கும், திருமணத்துக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனத்தில் இடம்பிடித்த தொடர்களில் ஒன்று தான், நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடர் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் 2018ம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு கதைக்களத்துடன் நாம் இருவர் நாமக்கு இருவர் இரண்...