Posts

Showing posts with the label #Legislative | #Assembly | #Reconvenes | #Recess

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

Image
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது! சென்னை: சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இதில் உயர் கல்வி, பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 18ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடியது. அன்றைய தினம் தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. தொடர்ந்து 7ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக்கோரிக்கை விவாதமும், 8ம் தேதி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகா...