தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்! காதல் மனைவியை கொன்ற கணவன் வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!
தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்! காதல் மனைவியை கொன்ற கணவன் வேலூரில் அதிர்ச்சி சம்பவம்! வேலூர் மாவட்டம் குடியாத்தம்கே.வி.குப்பத்தை அடுத்த வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம்( வயது 24) கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் அருகே உள்ள தனியார் ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அதே ஐடிஐ கல்லூரியில் குடியாத்தம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுப்ரஜா ( வயது 24) என்ற பெண்ணும் படித்து வந்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகம் மற்றும் சுப்ரஜா ஆகியோர் கே.வி.குப்பம் அருகே உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சென்னை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். பிறகு அங்கிருந்து சொந்த ஊரான கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கள் பகுதியில் விநாயகத்தின் வீட்டில் வசித்து வந்தனர். சுப்ரஜாவிற்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுப்ரஜாவின் தந்தை இறந்துவிட்ட நிலையில் சுப்ரஜாவின் தங்கை சென...