விக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா ??
விக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா ??
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
இந்த முறை தான் கமல் படத்திற்கு முதல்முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய ‘பத்தல… பத்தல…’ எனும் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளது .
இந்த நிலையில் படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் டிரைலர் 15.05.2022 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது..இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் விஜய்சேதுபதி, சிலம்பரசன், நரேன், உதயநிதி, இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் . இதில் கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் தனக்கு நிகர் யாரும் இல்லை என போட்டி போட்டுக்கொண்டு தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது டிரைலர் பார்த்தாலே தெரிகிறது.
டிரைலரை பார்த்த ரசிகர்கள், Goosebumps என அவரது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். டிரைலருக்கு அடுத்த படியாக அனைவரின் கவனத்தை ஈர்த்தது கமலின் ஆடைதான்.
கமல்ஹாசன் ‘விக்ரம்’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் அணிந்த ‘உபெர் கூல் ஜாக்கெட்’ உடை அனைவர் மனதிலும் இடம்பிடித்தது. அதில் கமல் கம்பீரமாக தோற்றமளித்தார். இந்த ஜாக்கெட் கமலுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாக தான் இருக்க வேண்டும் .
இந்த ஜாக்கெட்டில் இத்தனை விஷயம் இருக்கா என அனைவரையும் ஆச்சரியப்பட்ட வைக்கிறது.
இந்த ஜாக்கெட் லெதரால் உருவாக்கபட்டு விக்ரம் திரைப்பட தீமை குறிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்தது.இதில் ஜாக்கெட் முழுவதும் படத்தில் பயன்படுத்திய துப்பாக்கிகள் படம் கையால் வரையப்பட்டுள்ளது.
இந்த ஜாக்கெட்டின் பின்புறம் படத்தின் டைட்டிலை குறிக்கும் வகையில் ‘V’ என்ற எழுத்து சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. படத்தின் தீமான Code Purple கொண்டதாக இந்த ஜாக்கெட் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, கேங்ஸ்டர்கள் என அனைத்தையும் வெளிக்காட்டும் வகையில் இந்த ஜாக்கெட் உள்ளது .
மெட்டலால் உருகாக்கப்பட்ட சிறு துண்டுகள் இந்த ஜாக்கெட்டில் அங்கங்கு இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஜிப், பாக்கெட், கிராசான வளையங்கழும் இந்த ஜாக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது.
திருமண கோலத்தில் ஆலுமா டோலுமா பாட்டுக்கு ட்னஸ் ஆடிய ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி !!
இந்த ஜாக்கெட் டிசைனரின் பெயர் அம்ரிதாராம்.இவர்தான் கமலின் தனி பிரத்தேக ஆடை வடிவமைப்பாளர் ஆவார்,கமலுக்கு மட்டுமல்ல அவரது மகள் ஸ்ருதிஹாசனுக்கும் அம்ரிதா ராம் தான் ஆடை வடிவமைப்பாளராம்.கமலின் ஸ்டையிலான ஜாக்கெட் போட்டோ செம டிரெண்டாகி வருகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Related Topics:விக்ரம் டிரைலர்
Click to comment
Comments
Post a Comment