பிரபல சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!753076564


பிரபல சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!


பிரபல சீரியல் நடிகை தீபா, இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். ஏற்கெனவே முதல் கணவருடனான திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்தான பின்னர், மகனுடன் தனியே வாழ்ந்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை தீபா, வீடியோ எடிட்டர் சாய் கணேஷ் பாபுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்களது காதலுக்கும், திருமணத்துக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனத்தில் இடம்பிடித்த தொடர்களில் ஒன்று தான், நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடர் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் 2018ம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு கதைக்களத்துடன் நாம் இருவர் நாமக்கு இருவர் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. 

 

இந்த சீரியலில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை தீபா. இவர் ரெக்க கட்டி பறக்குது மனசு, பகல் நிலவு, ஆண்டாள் அழகர் உள்ளிட்ட பல சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டரிலேயே நடித்து மக்கள் மனதில் வில்லியாக பதிவானவர். தற்போது தீபா சன் தொலைக்காட்சியில் பிரியமான தோழி, ஜீ தொலைக்காட்சியில் அன்பே சிவம் தொடரில் தீபா பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை தீபா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை தீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று மகனுடன் தனியே வசித்து வருகிறார். தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

 

நடிகை தீபா, சாய் கணேஷ் பாபுவை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தீபா காதலர் சாய் கணேஷ் பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மை லவ் பாபு என அவர்  குறிப்பிட்டுள்ளார். சாய் கணேஷ் பாபு வீடியோ எடிட்டராக இருக்கிறார். இரண்டாவது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni