38 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைஞர் சிலை திறப்பு!! ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்!!1433029690


38 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைஞர் சிலை திறப்பு!! ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்!!


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவருக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கிறார்.
சுமார்  ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு சிலையை இன்று மே 28ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்க இருக்கிறார். 
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில்,திமுக தொண்டர்களுக்கு முதல்வர்  ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

.அக்கடிதத்தில் 
“அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வரவேற்பு மடல்.இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழகத்தை  வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழக  அரசின் சார்பில்  திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்.திசையெல்லாம் மகிழ்ச்சி பரவிடும் நாள்! ‘உடன்பிறப்பே..’ என்று தமது காந்தக் குரலால் அவர் நம்மை பாசத்துடன் அழைப்பது போன்ற உணர்வைப் பெறுகின்ற திருநாள்.தனது கை உயர்த்தி,ஐந்து விரல்களைக் காட்டி மக்களின் செல்வாக்கைப் பெற்ற நம் உயிர்நிகர்த் தலைவரை, தமிழக மக்கள் 5  முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தனர். அதிக ஆண்டுகள் முதல்வர்  பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர். அரசியல்,பொதுவாழ்வில் நேரான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவது போல,தலையில் நேர்வகிடு எடுத்த இளமையின் விளிம்பிலான கலைஞரின் சிலை.

இது. எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவால் 1987ம் ஆண்டு மறைந்த போது கலைஞர் சிலையை  கடப்பாரை கொண்டு தாக்கி, தகர்த்தெறிந்தனர். எம்.ஜி.ஆர். உடல்நலமில்லாமல் இறந்ததற்குக் கலைஞர் சிலையை ஏன் உடைக்க வேண்டும்?என அப்போது  பொதுமக்களும் குரல் எழுப்பினர். தலைவரின் சிலையைத் தகர்க்கும் புகைப்படம் நடுநிலை ஏடுகளில் வெளியாகி,தமிழகத்தையே கதிகலங்க வைத்தது.ஆனால் கலைஞர்  தன் சிலை தகர்க்கப்பட்ட நிலையிலும், சற்றும் மனம் தளராமல், தன் நெஞ்சத்தில் ஊறும் வற்றாத தமிழ் உணர்விலிருந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து, “செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும்.அந்த சின்னத் தம்பி என் முதுகில் குத்தவில்லை. நெஞ்சில்தானே குத்துகிறான். அதுவரையில் நிம்மதி எனக்கு” என கவிதையினை வடித்து சிறப்பித்தார். 

Comments

Popular posts from this blog