தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்! காதல் மனைவியை கொன்ற கணவன் வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!


தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்! காதல் மனைவியை கொன்ற கணவன் வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!


வேலூர் மாவட்டம் குடியாத்தம்கே.வி.குப்பத்தை அடுத்த வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம்( வயது 24) கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் அருகே உள்ள தனியார் ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

அதே ஐடிஐ கல்லூரியில் குடியாத்தம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுப்ரஜா ( வயது 24) என்ற பெண்ணும் படித்து வந்த நிலையில்  இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகம் மற்றும் சுப்ரஜா ஆகியோர் கே.வி.குப்பம் அருகே உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து  கொண்டனர்.

இருவரும் சென்னை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். பிறகு அங்கிருந்து சொந்த ஊரான கே.வி.குப்பம் அடுத்த  வடுகன்தாங்கள் பகுதியில் விநாயகத்தின்  வீட்டில் வசித்து வந்தனர். சுப்ரஜாவிற்கு 2 வயது  ஆண் குழந்தை உள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுப்ரஜாவின் தந்தை இறந்துவிட்ட நிலையில் சுப்ரஜாவின் தங்கை சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.அவரது தாயாரும் சென்னையில் உள்ள நிலையில்  சுப்ரஜா அவரது அத்தையான தனலட்சுமி  என்பவரின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்துள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக  சுப்ரஜாவிடம்  இருந்து எந்த அழைப்பும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து விநாயகத்திடம் கேட்டபொழுது அவர் முன்னுக்குப்பின் பதில் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சுப்ரஜாவின் அத்தை தனலட்சுமி சுப்ரஜாவை காணவில்லை எனவும் சுப்ரஜாவை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறி கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனிடையே பெண் காணவில்லை என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் போலீசார் விசாரணை செய்வதை அறிந்த விநாயகம்  வடுகன்தாங்கல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்திடம் காலை சரணடைந்துள்ளார். மேலும் அவரது தம்பி விஜயன் மற்றும் உறவினரான 17 வயது  சிறுவன் ஆகியோரும் சரணடைந்தனர்.

 

மேலும் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கே.வி குப்பம்  காவல் நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில் , விநாயகமிடம் விசாரணை மேற்கொண்ட கே.வி.குப்பம் போலீசார் விசாரணையில்  சுப்ரஜா வுக்கும் விநாயகயதுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது

மேலும் விநாயகத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி மருத்துவமனை அழைத்துச் செல்வதாக கூறிச்சென்ற விநாயகம் வடுகங்தாங்கல் அருகே முதினாம்பட்டு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சுப்ரஜாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகே உள்ள சுடுகாட்டில் புதைத்துள்ளதை ஒத்துக் கொண்டுள்ளான்.

 

மேலும் வினாயகம் மற்றும் அவரது உறவினர்களை  சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்கு புதைக்கப்பட்டிருந்த இடத்தில் பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். பெண் காணவில்லை என்ற  புகாரை கொலை வழக்காக மாற்றி கே. வி.குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்த கணவரே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni