10ம் வகுப்பு மாணவியும்.. வேட்டையாடிய 10 பேரும்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மேல் கூடலூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி. இவரது மகள் 15 வயது சிறுமி. இந்த சிறுமி செஞ்சி அருகேயுள்ள செ.குன்னத்தூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி கடந்த சில தினங்களாக மனதளவிலும் உடலளவிலும் சோர்வாக இருந்துள்ளார். இதனையடுத்து பள்ளி ஆசிரியை ஹேமலதா மாணவியை அழைத்து விசாரணை செய்துள்ளார்.
இந்த விசாரனையில் தனது தாய்மாமன் சசி என்பவர் தன்னை பல நாட்களாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும், அவருடன் சேர்ந்து நண்பர்கள் 9 பேர் தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து கூட்டு பாலியலில் ஈடுபட்டதாக தெரிவித்து அழுதுள்ளார்.
Comments
Post a Comment