ராகு கேது பெயர்ச்சி 2022: எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு... யார் பரிகாரம் செய்ய வேண்டும்


ராகு கேது பெயர்ச்சி 2022: எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு... யார் பரிகாரம் செய்ய வேண்டும்


News

oi-Jeyalakshmi C

மதுரை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் இடப்பெயர்ச்சி ஆக உள்ளன. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு ராகு கேது பெயர்ச்சி தலங்களில் சிறப்பு யாகங்கள் லட்சார்ச்சனைகள் நடைபெற உள்ளன. இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வரும் யார் யார் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

 பறந்த ஆர்டர்.. நீங்க 3 பேரும் உடனே கிளம்பி வாங்க.. பரபரக்கும் பறந்த ஆர்டர்.. நீங்க 3 பேரும் உடனே கிளம்பி வாங்க.. பரபரக்கும்

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். இப்போது மேஷ ராசிக்கு வரப்போகும் ராகு செவ்வாயைப் போலவும், துலாம் ராசிக்கு வரப்போகும் கேது சுக்கிரனைப் போலவும் செயல்படப்போகிறார்.

ராகு கேது பெயர்ச்சி விழா

ராகுபகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது ராகு பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு எதிர்வரும் இம்மாதம் 21ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதே போல திருநாகேஸ்வரம் நாகநாதசுசுவாமி கோவிலில் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.

திருநாகேஸ்வரத்தில் லட்சார்ச்சனை

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு தலம் எனப்போற்றப்படும் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். வாக்கிய பஞ்சாங்கப்பட்டி வருகிற 21ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி வருகிற 19ஆம் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் ராகு பெயர்ச்சி விழா தொடங்குகிறது. தொடர்ந்து 20ஆம் தேதி 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் 21ஆம் தேதி காலை 10.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது.

திருப்பாம்புரம்

தென் காளகஸ்தி என்றழைக்கப்படும் திருப்பாம்புரம் தேவாரப்பாடல் பெற்ற பெருமை வாய்ந்ததாகும். இங்கு ஸ்ரீ வண்டுசேர்குழலி சமேத ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் வீற்றருந்து அருள்பாலிக்கிறார். ராகுவும் - கேதுவும் ஏக சரீரமாக இருந்து இறைவனைப் பூஜித்து அருள் பெற்றமையால் இது ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தலம் ஒன்றை வழிபடுவதால், திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம் மற்றும் காளஹஸ்தி ஆகிய 5 தலங்களை தரிசித்த பலன்களை அடையலாம் என்பது ஐதிகம்.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை தொடங்கியது. நாளை வெள்ளிக்கிழமை வரை லட்சார்ச்சனை நடக்கிறது. பின்னர் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையும் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகு கேது பரிகார யாகங்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஏகசரீரமாக அருள்பாலிக்கும் ராகுகேதுவிற்கு வரும் 20ஆம் தேதி மாலை 4 மணியளவில் சிறப்பு பரிகார யாகங்கள் நடைபெற உள்ளன. மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும், ராகு திசை ராகு புத்தி நடைபெறுபவர்களும், கேது திசை கேது புத்தி நடைபெறுபவர்களும் யாகத்தில் பங்கேற்று பரிகாரம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Read more about:

rahu ketu peyarchi palan 2022 rahu peyarchi ketu peyarchi astrology ராசி கேது பெயர்ச்சி பலன் 2022 ராகு பெயர்ச்சி கேது பெயர்ச்சி ஜோதிடம்

English summary

The shadow planets Rahu and Ketu are displaced. Rahu Mesham in Rishabam and Ketu Thulam in Viruchigam will be relocated. Let’s see who can make amends for which zodiac signs are affected by this Rahu Ketu shift.

Story first published: Thursday, March 17, 2022, 13:02 [IST]

Other articles published on Mar 17, 2022

Comments

Popular posts from this blog