ஐஸ்வர்யாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் வரும் பிரச்சனை.. இனி மீனா - ஜீவா நிலைமை இதுதான்!


ஐஸ்வர்யாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் வரும் பிரச்சனை.. இனி மீனா - ஜீவா நிலைமை இதுதான்!


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா மீது ஜீவாவுக்கு பொறாமை வரும் அளவுக்கு கதை வந்து விட்டது. இப்படியே போனால் ஐஸ்வர்யா தான் வீட்டில் எல்லாமே என்ற நிலை வந்துவிடுமோ என்ற எண்ணம் ஜீவா - மீனாவுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. அதற்கு என்ன காரணம்? இன்றை எபிசோடில் நடப்பவை சுருக்கமாக.

சூப்பர் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறந்ததில் இருந்து ஐஸ்வர்யா முழு நேரமும் கடையில் தான் இருக்கிறார். படிப்பை பாதியில் விட்டுட்டு முழு நேரமும் மூர்த்தி - கதிருக்கு உதவியாக கடையில் இருக்கிறார். இதைப்பார்த்து ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் சந்தோஷம் தான். மூர்த்தி மனதார ஐஸ்வர்யாவை பாராட்டுக்கிறார். இதைப்பார்த்த மீனாவுக்கு லைட்டாக பொறாமை. இப்படி இருக்கையில், மீனா அப்பாவுக்கு நெஞ்சு வலி வர, அவரை 6 மாதத்துக்கு ரெஸ்ட் எடுக்க சொல்கிறார் டாக்டர்.

இதையும் படிங்க.. மறுபடியும் அழகான பெண் குழந்தை.. மகிழ்ச்சி வெள்ளத்தில் சன்டிவி சீரியல் பிரபலம்!

அந்த 6 மாதத்துக்கு ஜீவா கடையை பார்த்து கொள்வார் என மூர்த்தி வாக்கு கொடுக்க, இப்போது ஜீவா, மீனா அப்பாவின் சூப்பர் மார்க்கெட் கடையில் தான் இருக்கிறார். இதனால் ஜீவா பார்த்த வேலையும் சேர்த்து இப்போது ஐஸ்வர்யா பார்க்கிறார். கணக்கு பார்ப்பது, பேங்க் போவது என ஐஸ்வர்யா அந்த வேலையை பார்த்து வருகிறார். இந்நிலையில், இன்றைய எபிசோடில் மூர்த்தி பேங்க் போகும்படி ஜீவாவிடம் கேட்க, அதற்கு ஜீவா சூப்பர் மார்க்கெட்டில் வேலை இருப்பதாக கூற, உடனே மூர்த்தி அந்த வேலையை ஐஸ்வர்யாவிடம் தருகிறார்.

அவ்வளவு தான், மீனா மற்றும் ஜீவாவுக்கு முகமே மாறிவிடுகிறது. ஜீவா, அண்ணன் நம்மளை தப்பாக நினைத்துக் கொள்வாரோ என பயப்படுகிறார். உடனே, தனம் அண்ணி உள்ளே வந்து, வெறும் 6 மாதத்துக்கு தான், மறுபடியும் நீ கடைக்கு வந்த அப்புறம் இந்த வேலை எல்லாம் நீயே பாரு ஜீவா என்கிறார். பிறகு தான் ஜீவாவுக்கு நிம்மதி வருகிறது. ஆனால் மீனா இதையே சாக்காக வைத்து ஜீவாவை சூப்பர் மார்க்கெட்டில் இருக்க வைக்க பிளான் செய்கிறார். மீனாவின் அப்பா பிளானும் அதே தான் .

இதையும் படிங்க.. புதுமாப்பிள்ளைக்கு புத்தகங்களை சீதனமாக வழங்கி அசத்திய நண்பர்கள்.. இது வேற லெவல் ஃப்ரெண்ட்ஷிப்…

ஏற்கனவே மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கு சண்டைக்கும் மேல் சண்டை வரும். இப்போது மொத்த குடும்பமும் ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஐஸ்வர்யாவும் கண்ணனும் ரூம் இல்லாமல் கஷ்டப்படுவதே வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை இதற்கிடையில் ஜீவா இடத்தை ஐஸ்வர்யா பிடித்துவிட்டதாக மீனா ஏற்றிவிடுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni