குடும்ப பிரச்னை; பிரிந்து சென்ற மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவன்... கடைவீதியில் வெறிச்செயல்


குடும்ப பிரச்னை; பிரிந்து சென்ற மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவன்... கடைவீதியில் வெறிச்செயல்


மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே நல்லுச்சேரி கூடலூர் கிராமம் நடுத்தெருவைச்  சேர்ந்த ஜான்சன் சத்தியசீலன் மகன் விக்டர் வினோத்குமார் (வயது 35 ). இவரின் மனைவி புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட். இவர் சங்கரன்பந்தலிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு  மகன், மகள் என இரு பிள்ளைகள்.  கணவன், மனைவி இருவரும், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 6 மாத காலமாக  பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஹேமா ஜூலியட், கீழப்பாதி வாய்க்கால்கரை தெருவிலுள்ள தனது தந்தை அய்யாபிள்ளை  வீட்டில் வசித்து வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!

1 வருட டிஜிட்டல் சந்தா₹899 மட்டுமே! மேலும் 1 மாத சந்தா இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க...Get Offer

இந்நிலையில் நேற்று (16.03.2022) மாலை  பள்ளி முடிந்து ஹேமா ஜூலியட் பஸ்ஸில்  செம்பனார்கோயில் கடைவீதிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த விக்டர் வினோத்குமார், தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் எந்த பிரச்னையும் வராது எனவும் கூறி தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளதாக தெரிகிறது. அதற்கு ஹேமா ஜூலியட் மறுக்கவே விக்டர் வினோத்குமார்,   கடைவீதியில் பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் தனது மனைவி ஹேமா ஜூலியட்டின் கழுத்தை பிளேடால் கிழித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கொண்டு செல்லப்பட்டார்.  தகவலறிந்த செம்பனார்கோயில்   போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணவர் விக்டர் வினோத்குமாரை கைது செய்தனர். கூட்டம்  அதிகமுள்ள கடைவீதியில் குடிபோதையில் மனைவியின் கழுத்தை பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni