நம்பிக்கையை விதைக்கும் தமிழ் சினிமாவின் புதிய பாதை!
நம்பிக்கையை விதைக்கும் தமிழ் சினிமாவின் புதிய பாதை!
வழக்கமான ஃபார்முலா அம்சங்களை தவிர்த்து வித்தியாசமான திரைக்கதை, திணிக்கப்படாத பாடல் காட்சிகள், இயல்பான காட்சியமைப்புகளுடன் கதைக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்கள், பாலு மகேந்திரா, மகேந்திரன் காலங்களில் வரத் தொடங்கின.
அவர்களின் ‘முள்ளும் மலரும்’, ’வீடு’, ’ஜானி’, போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவை புதிய பாதையில் பயணம் செய்ய வைத்தது.
ஒரு ஆள் 10 பேரை அடிப்பது போன்ற காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்குப் பதில் சிரிப்பை வரவழைத்து. பஞ்ச் டயலாக்குகள் சலிப்பை ஏற்படுத்த ஆரம்பித்தன.
இதேபோல் சேது, அழகி, காசி, காதல், வெயில், ஆட்டோகிராப், அங்காடித் தெரு போன்ற திரைப்படங்களின் கதாநாயகர்கள் எளிமையான மனிதர்களாகவும், விளிம்பு நிலை மனிதர்களாகவும் இருந்து தமிழ் சினிமாவின் போக்கில் நம்பிக்கையை விதைத்தனர்.
கில்லி திரைப்படத்தில், ஒற்றை ஆளான விஜய் நூற்றுக்கணக்கான வில்லன் ஆட்களால் தாக்கப்படப் போகும் நேரத்தில் த்ரிஷாவின் கழுத்தில் கத்தியை வைத்து தப்பிப்பதும், சாமி திரைப்படத்தில் போலிஸ் அதிகாரியான விக்ரம், வில்லன்களிடம் மோத வேண்டிய சூழலில் ஓட ஆரம்பிப்பதும் நம்பகதன்மையையும் யதார்த்த்தையும் அதிகரிக்க செய்து தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு திருப்பியது.
தனுஷின் ட்வீட்டை லைக் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! மீண்டும் இணைய க்ரீன் சிக்னல்?
’காதலில் சொதப்புவது எப்படி?’, ’பீட்சா’, ’பண்ணையாரும் பத்மினியும்’, ’அட்டக்கத்தி’ போன்ற திரைப்படங்கள் புதிய அலை இயக்குனர்களை உருவாக்கியது. கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி மோகன், பா. ரஞ்சித், நளன் குமாரசாமி போன்றவர்கள் கதையை விட சுவாரஸ்யமான திரைக்கதையை அமைப்பதில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினர்,
தோனி முதல் தனுஷ் வரை பிரபலங்கள் விரும்பி அணியும் டி-ஷர்ட் - விலையைக் கேட்டா தலை சுத்திடும்!
ஜிகர்தண்டாவின் திரைக்கதை சுவாரஸ்யம், மெட்ராஸ், காலா, கபாலி போன்ற புதிய வகை அரசியல் கதைகள், அறம், அருவி போன்ற புதிய கதைக்களங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் புதுமையான காட்சி அனுபவங்கள் என தமிழ் சினிமா கடந்து வந்த பாதையும், தற்போது பயணம் செய்யும் தடமும் புதிய பாதையாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment