பந்துவீச்சில் அசத்திய லக்னோ: பேட்டிங்கில் சொதப்பிய மும்பை- 8-வது போட்டியாக தொடர் தோல்வி
ஐ.பி.எல் 2022 தொடரின் 37-வது போட்டியில் மும்பை அணியும் லக்னோ அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல்.ராகுல் களமிறங்கினர். டிகாக் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து, மணிஷ் பாண்டே களமிறங்கினார். அவரும் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் ராகுல் அதிரடியாக ஆடினார். ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமலும், குர்ணால் பாண்டிய 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், மறுபுறம் கே.எல்.ராகுல் அதிரடியைக் கைவிடாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். அதிரடியாக ஆடிய அவர் 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 168 ரன்களைக்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment