ரோஹித் சர்மா, இஷான் கிஷன் பந்தை நன்றாக அடிக்கின்றனர் - ஜெயவர்தனே ஜோக்


ரோஹித் சர்மா, இஷான் கிஷன் பந்தை நன்றாக அடிக்கின்றனர் - ஜெயவர்தனே ஜோக்


ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர், இஷான் கிஷன் போன்ற ஹைப் வீரர் இருவரையுமே ஒரே ஓவரில் சிஎஸ்கேவின் முகேஷ் சவுத்ரி வீழ்த்தி மும்பை இந்தியன்ஸை கிள்ளி எறிந்துவிட்டார், பிறகு உனாட்கட் தயவில் தோனி பினிஷ் செய்து முடித்தார். இந்நிலையில் இருவருமே டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில் இருவரும் நன்றாகப் பந்தை அடிப்பதாக மும்பை பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே ஜோக் அடித்துள்ளார்.

டக் அவுட் ஆன ரோஹித் சர்மா 14 டக்குகளுடன் பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங் சாதனையை டக்கில் உடைத்துள்ளார். இந்நிலையில் நன்றாக ஆடுகிறார் என்கிறார் மகேலா ஜெயவர்தனே. ரோஹித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 114 ரன்களை 16 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தன, தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோரின் மோசமான ஆட்டம் குறித்து பீதி அடையத் தேவையில்லை என்று கருதுகிறார், 5 முறை சாம்பியனான இந்தியன் பிரீமியர் லீக்கில் 7 தோல்விகளுடன் தேவையற்ற சாதனையை படைத்திருந்தாலும், இரண்டு பேட்டர்களுக்கும் ஆதரவு தேவை என்கிறார் ஜெயவர்தனே.

இந்நிலையில் மகேலா கூறியது:

"நேர்மையாகச் சொல்வதானால், இஷான் முதல் இரண்டு ஆட்டங்களில் நன்றாகப் பேட்டிங் செய்தார். பின்னர் சற்று சறுக்கினார். ரோஹித் பந்தை நன்றாக அடிக்கிறார், அவர் நல்ல தொடக்கத்தைப் பெறுகிறார் ஆனால் பெரிய இன்னிங்ஸ் கைகூடவில்லை. 15-20 ரன்களுக்கு நன்றாகத்தான் ஆடுகிறார் பின்னர் அவரால் அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை.

அவர்கள் பந்தை சரியாக அடிக்காதபோது அல்லது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நான் கவலைப்படுவேன், ஆனால் அவர்கள் இருவரும் வெளியேயும் வலைகளிலும் நன்றாக பேட்டிங் செய்கிறார்கள்” என்று ஜெயவர்த்தனே CSKவிடம் MI தோல்வியடைந்த பிறகு பத்திரிகைகளிடம் கூறினார்.

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni