இந்தியா பிப்ரவரி மாதத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை.!


இந்தியா பிப்ரவரி மாதத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை.!


குறிப்பாக இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் காரணமாக வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படிகடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது புதிய சட்ட விதிகளுக்கு புறம்பாக போலி செய்திகளை அனுப்பியது, மற்ற பயனர்களுக்கு தொல்லை கொடுப்பது மற்றும் இன்னும் பிற தவறான காணரங்களுக்காக அந்த கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் பயனர்கள் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கொடுத்த புகார்கள் அடிப்படையிலும், விதிகளை மீறியவர்கள் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் இதற்காக Abuse Detection Technology என்ற தொழில்நுட்பத்தை
கட்டமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பயனுள்ள பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை மேற்கொள்ளலாம். பின்பு இதில் முக்கியமான டாக்குமெண்ட்ஸ், போட்டோவையும், ஃபைல்களையும் எளிமையாக அனுப்ப முடியும்.

 

இருந்தபோதிலும் ஒரு ஃபைல் குறிப்பிட்ட அளவுக்குள் (size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். பின்பு இதன் காரணமாக வேறு சிலஅப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்புவதுண்டு.

 

மேலும் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரை அளவுள்ள ஃபைல்களை பயனர்கள் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதற்கான சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

குறிப்பாக இந்த வசதி முதற்கட்டமாக ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனத் தெரிகிறது. அதன்பின்பு தான் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தகக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog