போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர ரூ.1000 போதும்.. 5 வருடத்திற்குள் இவ்வளவு சேமிக்கலாம்!
போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர ரூ.1000 போதும்.. 5 வருடத்திற்குள் இவ்வளவு சேமிக்கலாம்!
பிக்சட் டெபாசிட் என அழைக்கப்படும் நிலையான வைப்பு திட்டத்தில் பொதுமக்கள் விரும்பி முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது.அது வங்கியாக இருந்தாலும் சரி, மற்ற தனியார் நிதி நிறுவனங்களில் இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கின்றனர். அதற்கு மிக முக்கியமான காரணம், மற்ற எல்லா சேமிப்பு திட்டங்களை காட்டிலும் பிக்சட் டெபசிட் திட்டத்தில் ரிஸ்க் குறைவு, சேமிப்பு காலம் குறைவு, வரிச்சலுகையும் கிடைக்கிறது. அந்த வகையில் தபால் துறையும் பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இன்சூரன்ஸ் பாலிசியில் குழந்தையை நாமினியாக சேர்க்கலாமா? பதில் இதோ
போஸ்ட் ஆபீஸில், 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டு காலம் வரை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம். 7 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 5.50% வட்டி வழங்கப்படுகிரது. அதே போல் 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD முதலீட்டு திட்டங்களுக்கு 5.50 %வட்டி , 3 ஆண்டு FDக்கு 5.50 சதவீத வட்டி விகிதமும், 3 முதல் 5 வருட FD திட்டங்களுக்கு 6.70 சதவீத வட்டியும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
savings account : வங்கியில் தொடங்குவதற்கு முன்பு இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
வட்டியுடன் சேர்த்து வாடிக்கையாளர்களை கவர, சில சலுகைகளையும் தபால் துறை செயல்பாட்டில் வைத்துள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்த பின்பு வாடிக்கையாளர்கள் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் விலக்கு பெறலாம். பணத்திற்கு முழு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லை, இத்திட்டத்தின் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபீசில் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்க நினைப்பவர்கள், ஆன்லைன் மற்றூம் ஆஃப்லைன் இரண்டிலும் இதற்கான வழிகளை மேற்கொள்ளலாம். இதில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்ய வேண்டும். 100-ன் மடங்குகளில் மட்டுமே நீங்கள் FD இல் முதலீடு செய்ய முடியும். 18 வயதுக்கு மேல் உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணையலாம். 5 வருடத்தில் ஒரு நல்ல சேமிப்பை நீங்கள் செய்து விடலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment