2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்


2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்


தென்மேற்கு பருவமழைதொடங்கினாலும், காற்றின் திசை மற்றும் வலு, காலநிலைக்கு ஏற்ப வெயிலின் தாக்கம் தொடர வாய்ப்பிருப்பதாகசென்னைமண்டலவானிலைஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் இந்த கோடைக்காலத்தில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மே மாதத்தில் இது தொடரும் எனவும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் வெயில் இயல்பை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

தமிழ்நாட்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட மே மாதத்தில் கிடைக்கப்பெற்ற கோடை மழை மற்றும் அசானி புயல் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான வானிலை நிலவுவதன் காரணமாக தமிழ்நாட்டில் கோடை மழை படி படியாக குறைந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மழைக்கான வாய்ப்பு குறையும் வேளையில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது கிழக்கு திசையில் இருந்து தமிழ்நாடு நிலபரப்பிற்குள் வரும் காற்று போதிய வலுவில்லாததால், உணர்வெப்பம் அதிகரித்து, வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.

Must Read : கொடைக்கானல் கோடை விழா.. மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்குகிறது..!

குறிப்பாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இதன் காரணமாக வெப்பநிலையில் இயல்பை விட 1℃ -2℃ வரை வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. இன்னும் இரண்டு தினங்களுக்கு இதே நிலை தொடரும் என்பதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni