தளபதி 67 இசையமைப்பாளர் இவரா... அப்போ அடுத்த மாஸ் ஹிட் கன்ஃபார்ம்
தளபதி 67 இசையமைப்பாளர் இவரா... அப்போ அடுத்த மாஸ் ஹிட் கன்ஃபார்ம்
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா, சினிமா விருது வழங்கும் விழா ஆகியவற்றின் மேடைகளில் தளபதி 67 படத்தை தான் இயக்க உள்ளதை கன்ஃபார்ம் செய்துள்ளார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். இதனால் தளபதி 66 படத்தையே மறந்து தளபதி 67 படத்தை கொண்டாட துவங்கி விட்டனர் விஜய் ரசிகர்கள்.
கொரோனா சமயத்திலேயே விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி, 100 கோடி வசூல் பார்த்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது கமலை வைத்து விக்ரம், அடுத்து கார்த்தியுடன் கைதி 2 என அடுத்தடுத்த படங்களில் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறார் லோகேஷ். தற்போது மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டதால், #Thalapathy67 ஹேஹ்டேக்கை தொடர்ந்து ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜிடம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக அனைத்து படங்களிலும் பெயருக்கு மட்டுமே ஏதோ ஹீரோயின் வைத்துள்ளீர்ளே என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், அந்த படங்களின் கதை அப்படி. ஆனால் இனி வரும் என்னுடைய அடுத்தடுத்த படங்களில் பெண்களுக்கு அழுத்தமான கேரக்டர், முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார். இதனால் தளபதி 67 ஹீரோயின் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, தளபதி 67 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க போகிறாராம். லோகேஷ் கனகராஜின் மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக தளபதி 67 படத்திலும் அனிருத் இணைந்துள்ளாராம். மாஸ்டரை படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் - விஜய் - அனிருத் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் படம் நிச்சயம் மாஸ் ஹிட் என ரசிகர்கள் இப்போதே முடிவு செய்து விட்டார்கள்.
Comments
Post a Comment