லட்சுமியால் கண்ணம்மாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிரடி திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா


லட்சுமியால் கண்ணம்மாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிரடி திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் பல அதிரடி திருப்பங்களுடன் வர காத்திருக்கிறது. அதாவது லட்சுமிக்கு தன் தந்தை பாரதி என்பது தெரிந்ததால் அவர்மீது மிகுந்த பாசத்துடன் பழகி வருகிறாள். ஆனாலும் தனக்கு தெரிந்த உண்மையை தன் மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வெளியில் யாரிடமும் பகிராமல் உள்ளார்.

லட்சுமியின் நடவடிக்கைகளால் கண்ணம்மாவுக்கு ஆரம்பத்தில் சிறிய சந்தேகம் வந்தது. ஆனால் தந்தையின் ஏக்கத்தால் தான் இப்படி செய்கிறாள் என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள். ஆனால் எதர்ச்சையாக கண்ணம்மா பீரோவை திறக்கும் போது ஒரு பெயர் பலகை கீழே விழுகிறது.

அதைபார்க்கும் பொழுது பாரதி பெயர் அதில் எழுதி உள்ளது. இதை பார்த்த கண்ணம்மா, ஏன் இதை எடுத்துட்டு வந்த லட்சுமி வச்சிருக்கா என யோசிக்கிறார். அதன் பிறகுதான் அந்தப் பெயர் பலகையின் மேல் ஐ லவ் யூ அப்பா என்று எழுதியிருக்கிறதே கவனிக்கிறார்.

இதனால் பாரதி தான் தன் அப்பா என்ற விஷயம் லட்சுமிக்கு தெரிந்துள்ளது என்பது அறிந்த கண்ணம்மா நிலைகுலைந்து போகிறார். உடனே தனது அத்தை சௌந்தர்யாவுக்கு வீடியோ கால் செய்கிறார் கண்ணம்மா. லட்சுமிக்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சிட்டு இந்த பாருங்க என்று அந்த பெயர் பலகை காட்டுகிறார்.

உடனே சௌந்தர்யாவும், பாரதியின் தந்தையும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனால் அதன் பிறகு இந்த சிறு வயதிலும் லட்சுமி உண்மை தெரிந்த பிறகும் இவ்வளவு பக்குவமாக நடந்து கொள்கிறாள் என்பதை நினைத்து அவர்கள் இருவரும் சந்தோஷப்படுகிறார்கள்.

ஆனால் கண்ணம்மா என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்துயுள்ளார். அப்பா பாரதி தான் என்று தெரிந்த லட்சுமி அடுத்தது என்ன செய்வாள் என்ற குழப்பத்தில் கண்ணம்மா தற்போது உள்ளார். இவ்வாறு பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா வர இருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Related Topics:, , , , , , , , , ,

Comments

Popular posts from this blog

Backyard Beauty on a Budget

Vegan Wellington

Ndash ndash BIFU7RU