வெரி டேஞ்சரஸ் ஆக்ட்ரஸ்….அண்ணன் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்…யாரைச் சொல்கிறார் ஸ்ரீமன்?
வெரி டேஞ்சரஸ் ஆக்ட்ரஸ்….அண்ணன் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்…யாரைச் சொல்கிறார் ஸ்ரீமன்?
ஒரு காலத்தில் குணச்சித்திரம் மற்றும் காமெடியான வேடங்களில் ஸ்ரீமன் வெளுத்து வாங்குவார். விஜய் படங்களில் ஆரம்ப காலங்களில் நடித்து அசத்தினார் ஆந்திராவைச் சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
லவ் டுடே, நிலவே வா, சேது, வாஞ்சிநாதன், காஞ்சனா, உன்னைப்போல் ஒருவன், பஞ்சதந்திரம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். இவர் கடந்து வந்த பாதைகளில் சில நடிகர்களைப் பற்றி அவர் எப்படி பகிர்ந்து கொள்கிறார் என்று பாருங்கள்.
சினிமாவில் கேப்டன் என்றால் அது விஜயகாந்த் தான். சூட்டிங்ல இருக்கும்போது அவர் கேப்டன் மாதிரி இருப்பாரு. தனிப்பட்ட முறையில் என்னை அவருக்கு பிடிக்கும். என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது என்று சொல்லிக் கொடுத்த ஆசான்களில் அவரும் ஒருவர்.
விஜய் இஸ் மை லைப். என்னோட சினிமாங்கற ஏணியில விஜய் வந்து 3வது படி. 4வது படி. 5வது படி. ஒரு ப்ரண்டு. ஒரு பிரதர். வெல் விஷர். வெரி ஹார்டு ஒர்க்கர். நான் சோர்ந்து போற நேரங்கள்ல ஏறு என கைகொடுத்து என்னை ஏணில தூக்கி விட்டாரு.
அவருகூட டேன்ஸ் ஆடுறது ரொம்ப ஈசி. லைப்ல வந்து நான் மறக்கமுடியாத நபர்கள் யாருன்னு கேட்டா ஒரு நாலைஞ்சு பேரு இருக்காங்க. அவங்கள்ல ஒருவர் தான் விஜய். அவருகூட டேன்ஸ் ஆடுறது ரொம்ப ஈசி. பிராக்டிஸ்சே பண்ண மாட்டாரு. நல்ல டேன்ஸ் ஆடுறதுக்கு டைம் கொடுப்பாரு. எவ்வளவு கஷ்டமான மூவ்மெண்ட்னாலும் பார்க்கறது கவுட் மைன்ட்ல பண்றது..அப்படியே வர்றது…ரிகர்சல் பார்க்கறது…ஆடிடறது…நான் சொன்னதை டோட்டலா அப்படியே உல்டாவா எடுத்துக்கங்க.
பிரபுதேவா மாஸ்டர் கூடவும், விஜய் கூடவும் டேன்ஸ் ஆடுறது அவ்வளவு சிரமம். சிரமம்னா அப்படி இப்படி இல்ல. பென்ட் கிழிஞ்சிடும். ஒரு சாங் அவரு கூட ஆடிட்டு வந்தா ரெண்டரை மூணு கிலோ ஈசியா குறைஞ்சிடும். எப்படி கமல் சார்க்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டோமோ அதே மாதிரி விஜய் சார்க்கிட்டயும் நிறைய விஷயங்கள் கத்துக்கலாம்.
எல்லாருடைய லைப்லயும் வளர்ச்சிங்கறது வரும். எல்லாருக்குமே வரும். அவங்க அவங்களுக்கு ஏத்த வளர்ச்சி வரும். அந்த வளர்ச்சில வந்து லேசினஸ் வரும். எனக்கு வந்த ஒரு லேசினஸை பிரேக் பண்ணது விஜய் தான். கோவைசரளா அக்காவ பத்தி சொல்லியே ஆகணும். வெரி டேஞ்சரஸ் ஆக்ட்ரஸ். அவங்களுக்கு இவ்ளோண்டு மேட்டர் கொடுத்தா போதும். அதை அப்படியே ஷேப் பண்ணி டெவலப் பண்ணி எக்ஸ்ட்ராடினரியா பெர்பார்மன்ஸ் பண்ணிடுவாங்க.
சின்ன வயசுலருந்து 80வயசு வரைக்கும் எல்லாரையும் கவர் பண்ணக்கூடிய ஒரு பெர்பார்மர். மெனக்கட்டுக்கிட்டே இருப்பாங்க. இப்போ புதுசா என்ன பண்ணலாம்ங்கற தேடல் வந்து அக்காக்கு எப்பவுமே இருக்கும். அவங்களோட பர்பார்மன்ஸ பொறுத்தவரைக்கும் கரணம் தப்பினால் மரணம் தான் நமக்கு.
வடிவேலு சார்கூட இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை அவருக்கூட பண்ணினேன். அதோட செகண்ட் பார்ட் இன்னும் ஆரம்பிக்கலயேன்னு வருத்தமா இருக்கு. அந்தப்படம் பண்ணனும்னு.. நான் ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன். தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம் வடிவேலு அண்ணன்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Comments
Post a Comment