இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நடிகர் விஜய்யை பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது,...1244128850

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நடிகர் விஜய்யை பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, விஜய்யுடன் நடிக்கவேண்டும் என்பது எனது பலநாள் ஆசை. எதிர்காலத்தில் அது கண்டிப்பாக நடக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் பாலிவுட் படமான 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்கை முதலில் விஜய் என்னை தான் இயக்க சொன்னார். அப்போது என்னால் அப்படத்தை இயக்கமுடியாமல் போனது. அதைத்தொடர்ந்து தான் அந்த படத்தை நண்பன் என்ற பெயரில் ஷங்கர் இயக்கினார் என கூறியுள்ளார். மேலும் அப்படத்தை ஷங்கர் மிகவும் கலர்புல்லாக எடுத்ததாகவும், நான் எடுத்திருந்தால் அந்தளவிற்கு கலர்புல்லாக எடுத்திருக்கமாட்டேன் எனவும் பார்த்திபன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment