20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தவரை 4வது திருமணம் செய்த பிரபல நடிகை!1237055772


20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தவரை 4வது திருமணம் செய்த பிரபல நடிகை!


பிரபல ஹாலிவுட் நடிகையாகவும் பாடகியாகவும் டான்சராகவும் வலம் வருபவர் ஜெனிஃபர் லோபஸ். 52 வயதான ஜெனிஃபர் லோபஸ் எந்த அளவுக்கு திறமையால் பிரபலமானாரோ அதே அளவுக்கு காதல் மற்றும் திருமணங்களாலும் பிரபலமானவர். தனது பள்ளிக்கால பாய் ஃபிரண்டான டேவிட் க்ரூஸ் என்பவருடன் 10 ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் ஜெனிஃபர் லோபஸ். பின்னர் கியூபாவை சேர்ந்த ஓஜானி நோவா என்பவரை 1997ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அடுத்த ஆண்டே அவரை பிரிந்தார். பின்னர் ராப் பாடகரான சீன் கோம்ப்ஸ் என்பவருடன் 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதன் பிறகு கிறிஸ் ஜட் என்ற டான்சரை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் ஜெனிஃபர் லோபஸ். ஆனால் இந்த திருமணமும் நீடிக்கவில்லை. அடுத்த ஆண்டே அவரை பிரிந்தார்.

அதே சூட்டோடு 2002 ஆம் ஆண்டு முதல் நடிகரும் தயாரிப்பாளருமான பென் அஃப்லெக் உடன் காதல் உறவில் இருந்தார் ஜெனிஃபர் லோபஸ். 2004 ஆம் ஆண்டு அவரையும் பிரிந்த ஜெனிஃபர், அதே ஆண்டு பாடகரான் மார்க் ஆண்டனியை திருமணம் செய்தார். 2014 ஆம் ஆண்டுவரை அவருடன் வாழ்ந்த ஜெனிஃபர் லோபஸுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

2014 ஆம் ஆண்டு மார்க் ஆண்டனியை சட்டப்படி விவாகரத்து செய்த ஜெனிஃபர் லோபஸ் அதன்பிறகு டான்ஸர், பேஸ் பால் வீரர் ஆகியோருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஜெனிஃபர் லோபஸ் கடந்த ஆண்டு முதல் மீண்டும் நடிகரும் தயாரிப்பாளருமான Ben Affleck டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெனிஃபர் லோபஸ் தனது பழைய காதலரான பென் அஃப்லெக் நான்காவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே பங்கேற்றனர். பலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஜெனிஃபர் லோபஸ் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்த நபரை 4வதாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் வியக்க வைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni