வெளியானது பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்... ரசிகர்கள் உற்சாகம்856680296


வெளியானது பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்... ரசிகர்கள் உற்சாகம்


கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படமானது விரைவில் வெளியாக இருக்கிறது

இந்நிலையில், படக்குழு அப்டேட் ஒன்றை கொடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதன்படி, வருகிறான் சோழன் என்ற வாசகத்துடன் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையுடன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Comments

Popular posts from this blog

Super Easy Macaroni Salad Recipe #SuperEasyMacaroni