நம்பிக்கையை விதைக்கும் தமிழ் சினிமாவின் புதிய பாதை!
நம்பிக்கையை விதைக்கும் தமிழ் சினிமாவின் புதிய பாதை! நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகள் என இருந்த தமிழ் சினிமாவின் ஃபார்முலாவை உடைத்து வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்கள் பல. அவற்றைப் பற்றி இங்கே பதிவிடுகிறோம். வழக்கமான ஃபார்முலா அம்சங்களை தவிர்த்து வித்தியாசமான திரைக்கதை, திணிக்கப்படாத பாடல் காட்சிகள், இயல்பான காட்சியமைப்புகளுடன் கதைக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்கள், பாலு மகேந்திரா, மகேந்திரன் காலங்களில் வரத் தொடங்கின. அவர்களின் ‘முள்ளும் மலரும்’, ’வீடு’, ’ஜானி’, போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவை புதிய பாதையில் பயணம் செய்ய வைத்தது. ஒரு ஆள் 10 பேரை அடிப்பது போன்ற காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்குப் பதில் சிரிப்பை வரவழைத்து. பஞ்ச் டயலாக்குகள் சலிப்பை ஏற்படுத்த ஆரம்பித்தன. இதேபோல் சேது, அழகி, காசி, காதல், வெயில், ஆட்டோகிராப், அங்காடித் தெரு போன்ற திரைப்படங்களின் கதாநாயகர்கள் எளிமையான மனிதர்களாகவும், விளிம்பு நிலை மனிதர்களாகவும் இருந்து தமிழ் சினிமாவின் போக்கில் நம்பிக்கையை விதைத்தனர். கில்லி திரைப்படத்தில், ஒற்றை ஆளான விஜய் நூற்றுக்கணக்கான வில்லன் ஆட்களால் தாக்கப்படப் போகு...