Posts

பரபரப்பான போட்டி.. கடைசி ஓவரில் காட்டடி அடித்து ஃபினிஷிங் செய்த தோனி..! சிஎஸ்கே த்ரில் வெற்றி

Image
ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதிய போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்தது. இதற்கு முன் இரு அணிகளும் ஆடிய 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அனைத்திலும் தோல்வி மற்றும் சிஎஸ்கே ஒரெயொரு வெற்றி என்ற மோசமான நிலையில், இந்த போட்டியில் மோதின. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்(அதுமட்டும்தான் செய்தார்). சிஎஸ்கே அணி 2 மாற்றங்களுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியது. சிஎஸ்கே அணி: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, தோனி, ரவீந்திர ஜடேஜா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி. மும்பை இந்தியன்ஸ் அணி: இஷான் கிஷன் (விக்கெட்... விரிவாக படிக்க >>

மிஸ்டர் அண்ணாமலை வன்னியர் சமூகத்தை எதிர்ப்பது நல்லதல்ல.. காடுவெட்டி குரு மகள் பரபரப்பு அறிக்கை

Image
காடு வெட்டி குருவின் மகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்த ஒரு சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டையும் உரிமைகளையும் வன்னியர் மக்கள் கொடுக்கக்கூடாது என்று கூறியது கிடையாது. மற்ற சமுதாயத்திற்கு முன்னின்று இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர்களும் வன்னியர்களே. இந்த இட ஒதுக்கீட்டுக்காக 25 உயிர்களை பலி கொடுத்ததும் வன்னியர்களே. ஆனால் இன்று அண்ணாமலை வரலாறு தெரியாமல் வன்னியர் மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடும் அமைப்புகளை ஒன்று திரட்டி அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல. வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோது ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும், எதிர்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் வன்னியர்களின் உரிமை... விரிவாக படிக்க >>

புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 3 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

Image
புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 3 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

கோபிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி... பாக்கியாவுக்கு உண்மை தெரிந்து விட்டதா?

Image
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை சீரியல் ரசிகர்களுக்கும் ஒரு ட்விஸ்ட் வெயிட்டிங். பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்றால் அது கோபி கதாபாத்திரம் தான். மனைவியை ஏமாற்றி விட்டு காதலியுடன் ஊர் சுற்றும் குடும்ப தலைவன். இந்த சீரியலை பார்த்த அனைவரும் கோபியை திட்டாத நாளில்லை. உச்சக்கட்டமாக தற்போது பாக்கியா ஜெயிலில் இருக்கிறார். ஆனால் அவரை ஜாமீனில் கூட எடுக்க முயற்சி செய்யாத கோபி, ராதிகாவை கஷ்டப்பட்டு ஜாமீனில் எடுத்து அவருடனே இரவு வீட்டிலும் தங்குகிறார். இனியாவும் ஈஸ்வரி அம்மாவும் ஃபோன் செய்து கூப்பிட்டும் கூட கோபி வீட்டுக்கு வரவில்லை. அவரை ராதிகாவும் விடவில்லை. விரிவாக படிக்க >>

வித்தியாசமான 📷Camera-வா இருக்கே❗❗😲🔥 OPPO F21 Pro Unboxing & First Impression

Image
வித்தியாசமான 📷Camera-வா இருக்கே❗❗😲🔥 OPPO F21 Pro Unboxing & First Impression

அதிமுக அமைப்பு தேர்தல் தேதி மாற்றம் 37 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: தலைமை கழகம் அறிவிப்பு

Image
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மாவட்டச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டு, முதல் கட்டத்தேர்தல் வருகிற 21ம் தேதியும், 2ம் கட்டத் தேர்தல் 25ம் தேதியும் நடைபெறும். அதன்படி 21ம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்திற்கு சி.விஜயபாஸ்கர் மற்றும் ஜாபர் அலி, வடசென்னை வடக்கு (மேற்கு) ஜெயபால் மற்றும் வைரமுத்து, வடசென்னை தெற்கு (மேற்கு) கடம்பூர் ராஜூ மற்றும் செல்லப்பாண்டியன், தென்சென்னை வடக்கு (மேற்கு) சண்முகநாதன் மற்றும்... விரிவாக படிக்க >>

இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு!

Image
நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது, ஐடி துறையில் இருக்கும் ஊழியர்கள் வெளியேற்றம் அடுத்தச் சில காலாண்டுகளுக்குத் தொடரும் என வெளிப்படையாக அறிவித்துள்ளது. இப்படி ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் காரணத்தால் ஐடி நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் அதாவது பணிகளைக் கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் நிறுவனங்களின் செலவுகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்குப் பின்பு பெரும்பாலான நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் ஐடி சேவைகளில் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கிய காரணத்தால் குறுகிய காலத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான ப்ராஜெக்ட்-ஐ பெற்றது. இந்த ப்ராஜெக்ட்-ஐ வேகமாக முடிக்கப் போதுமான ஊழியர்கள் இல்லாத... விரிவாக படிக்க >>