இறையன்பு எடுத்த இப்படியொரு முடிவு: நோ சொல்லி கெத்து காட்டிய சம்பவம்!
சிறந்த நூல்களுக்கான விருதுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூல் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பரிசு வழங்குவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜனுக்கு, இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, 2018ஆம் ஆண்டு வெளிவந்த நூல்கள் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பரிசு குறித்த விவரங்கள் 2021 பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிடப்பட்டன. விரிவாக படிக்க >>